அமைச்சர் அறிவிப்பு அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள்

சென்னை: வேளாண் விளைபொருள் ஏற்றுமதிக்கான வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் கட்டமைப்புகள் ரூ.25 லட்சத்தில் மேம்படுத்தப்படும். பேரிடர் காலங்களில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சக்கரவகை நெல் அறுவடை இயந்திரங்களை மாற்றி வடிவமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும்.

கிராமப்புற வேளாண் அனுபவங்களை நேரில் கற்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5000 மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம் ஏற்படுத்தப்படும். உழவர் செயலியில் தனியாருக்குச் சொந்தமான மண்அள்ளும் இயந்திரங்கள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், டிரோன்கள், விசைத்துளைக் கருவிகள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இதற்காக 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். வேளாண் விளைபொருள் ஏற்றுமதிக்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

The post அமைச்சர் அறிவிப்பு அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் appeared first on Dinakaran.

Related Stories: