முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் நன்றி

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணைப்பு சக்கர ஸ்கூட்டி வழங்கவேண்டும்.

அரசு துறையில் பணியாற்றும் 50 வயது அடைந்த மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பதவி உயர்வு பெற தடையாக உள்ள டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வையும் ரத்து செய்து அத்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கைகளை பரிசீலத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணைப்பு சக்கர ஸ்கூட்டி வழங்கப்படும். அரசு பணியில் பணியாற்றும் 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி துறை தேர்விவிருந்து விலக்களிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், சிறப்புக் கல்வியினை பயில கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

40% மேல் உள்ள புற உலக சிந்தனையற்ற மதி இறுகமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவினை வழங்க ரூ.1200லிருந்து ரூ.1400 ஆக உயர்த்தி வழங்கப்படும் போன்ற பல்வேறு வரலாற்று திட்டங்களை சட்டமன்ற மானிய கோரிக்கையில் அறிவித்து லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கேற்றியுள்ளார். இதற்காக முதல்வருக்கும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

The post முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: