நீதிபதி சந்துரு அறிக்கையை நிராகரிக்க கூக்குரலிடுவது வேடிக்கையாக உள்ளது: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகளில் சாதிய, மத பாகுபாடுகளைக் களையும் வகையில் நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்திருக்கிறது. இந்த பரிந்துரை ஏதோ சாதிய மற்றும் மதத்துக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயல்கின்றனர்.

நீதிபதி சந்துரு அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்படும். அதன்பிறகு தான் எந்தப் பரிந்துரையை செயல்படுத்துவது என்பது குறித்து அரசு முடிவு செய்யும். அதற்குள் ஏதோ சாதி, மதத்துக்கு எதிராக செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
நீதிபதி சந்துருவின் பரிந்துரைகள் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிரானது என்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் சாதிய அடையாளங்களுடன் மோதிக் கொள்வது தான் கலாசாரமா?.

எனவே, நீதிபதி சந்துரு அறிக்கையில் நிறை, குறைகள் இருக்கலாம். அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதனைத் திருத்த வேண்டும். அரசே அந்த அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்தாது. ஆய்வு செய்த பின் தான் செயல்படுத்துவார்கள். இந்தச் சூழலில் ஏதோ சாதி, மதத்துக்கு எதிராக நீதிபதி சந்துரு அறிக்கை இருப்பதாகவும், அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் கூக்குரலிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நீதிபதி சந்துரு அறிக்கையை நிராகரிக்க கூக்குரலிடுவது வேடிக்கையாக உள்ளது: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: