ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன் : புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு

 


ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகினார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சியான காங். எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரனை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக சம்பாய் சோரன் உள்ளார். அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்படும் பட்சத்தில் புதிய முதல்வராக சம்பாய் சோரனை தேர்வு செய்தார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ED நெருக்கடி அளிப்பதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹேமந்த் சோரனிடம் ED விசாரணை நடத்தியது. ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் ஏற்கனவே ரூ.36 லட்சம் பணம், சொகுசு காரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அத்துமீறி நுழைந்து அமலாக்கத்துறையினர் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் அளித்துள்ளனர்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி ஹேமந்த் சோரன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

The post ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன் : புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: