தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

தருமபுரி: தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து. தற்போதுவரை தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தருமபுரி, பலாக்கோடு, தென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள தீயணைப்பு வாகனங்கள், தருமபுரி நகராட்சியின் தண்ணீர் வாகனம், ஆகியவற்றை பயன்படுத்தி தீயை அனைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தருமபுரி கணேசா திரையங்கம் இருந்த இடத்தில் தனியார் பர்னிச்சர் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடையில் நள்ளிரவில் சுமார் 12 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து தருமபுரியில் இருந்து புறப்பட்ட தீயனைப்பு வாகனங்கள் தீயயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீயானது அருகில் இருந்த ஸ்கேன் செண்டர், கடைகள் என மொத்தமாக பரவியுள்ளது.

இந்த விபத்தில் கோடிகணக்கிளான பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படாவிட்டாலும் கூட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இந்த தீவிபத்தால் சுமார் அரை கி.மீ தூரத்திற்கு பரவியதால் அங்கு கூட்டம் கூடியவர்கள், தீயனைப்பு வீரர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் மூச்சிதிணரல் ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: