ஜனவரியில் ராமர் கோயில் குடமுழுக்கு: ராமஜென்மபூமி அறக்கட்டளை தகவல்

அயோத்தி: வரும் ஜனவரி மாதம் ராமர் கோயில் குடமுழுக்கு நடத்த மூன்று தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் நேற்று கூறுகையில், ராமர் கோயில் குட முழுக்கு விழாவுக்கு ஜன.21,22 மற்றும் 23 ஆகிய தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படும். அரசியல் சார்பற்ற நிகழ்ச்சியில், 25,000 இந்து தலைவர்கள் கலந்து கொள்வார்கள்’’ என்றார்.

The post ஜனவரியில் ராமர் கோயில் குடமுழுக்கு: ராமஜென்மபூமி அறக்கட்டளை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: