வருமான வரி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி

புதுடெல்லி: வயர்கள், கேபிள்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான பாலிகேப் குழுமத்தின் மும்பை, புனே, அவுரங்காபாத், நாசிக், டாமன், குஜராத்தின் ஹலோல், டெல்லி உள்பட 50க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி மத்திய நேரடி வரிகள் ஆணையம் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத ரூ.4 கோடி மற்றும் 25க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அந்நிறுவனத்தில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத விற்பனை பணம் ரூ.1,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

The post வருமான வரி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி appeared first on Dinakaran.

Related Stories: