கூடுவாஞ்சேரி: ஆகஸ்ட்.12 ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் துளை போட்டு நகை கடையில் 92 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தங்கப்பாபுரம், வ உ சி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(54) இவர் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பாண்டூரில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். இவரது கடை அருகிலேயே பாண்டூரை சேர்ந்த பூபதி(50) என்பவர் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அப்பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கடையின் பின்பக்கம் வழியாக இருந்த ஷட்டரை திறந்து உள்ளே புகுந்து கூல்ட்ரிங்க்ஸ் கடையிலிருந்த ரூ.1. லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் அந்த கடையின் சுவற்றின் வழியாக துளை போட்டு நகைக் கடையில் புகுந்து நகைக் கடையில் இருந்த சுமார் 92 தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதில் அடையாளம் தெரியாத தெரியாமல் இருப்பதற்காக கடை முன்பு இருந்த 4 சிசிடி கேமராக்களை உடைத்து மழை நீரில் தூக்கி வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல் வந்த கடை உரிமையாளர்கள் கடைகளைத் திறந்து பார்த்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனே கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பளத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பாவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் துளை போட்டு 92 சவரன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை..!! appeared first on Dinakaran.