தனியார் தொலைதொடர்பு துறை சேவையை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசிய அழைப்பை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடி: நவீன கருவிகளை பறிமுதல் செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

சென்னை: சென்னையில் தனியார் தொலைதொடர்பு துறை சேவையை சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு பேசி வருகின்றனர். அப்படி வெளிநாடுகளுக்கு பேசிய அழைப்புகளை அவர்கள் நவீன கருவிகள் மூலம் உள்ளூர் அழைப்புகள் போன்று மாற்றி மோசடியில் ஈடுபட்டு வருவதாக, ஒன்றிய உளவுத்துறை தொலைதொடர்புத்துறைக்கு ரகசிய தகவல் அளித்தது. அந்தபடி ஒன்றிய தொலைதொடர்புத்துறை, ஒன்றிய உளவுத்துறை அளித்த தகவலின் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தனியார் தொலைதொடர்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மோசடி நடந்ததாக கூறப்படும் கிண்டியில் ஒரு குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், வெளிநாடுகளில் இருந்து வரழைக்கப்பட்ட வெளிநாடு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் 32 இணைப்புகள் கொண்ட சிம் பாக்ஸ் கருவி மற்றும் தனியார் தொலைதொடர்புத்துறையின் இன்டர்நெட் கருவி, யூபிஎஸ் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து தனியார் தொலைத்தொடர்புதுறை நிறுவன அதிகாரிகள் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

The post தனியார் தொலைதொடர்பு துறை சேவையை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசிய அழைப்பை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடி: நவீன கருவிகளை பறிமுதல் செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: