இம்மாத இறுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி: அனைத்து ஆசிரியர்களும் ஈடுபட உத்தரவு

நாகர்கோவில் இம்மாத இறுதியில் நடைபெறுகின்ற பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் முதல் 2 வாரத்திலும், மே இறுதி வாரத்திலும் நடைபெற உத்தரவிடப்பட்டு பணிகள் நடந்துள்ளது. மே இறுதி வாரத்தில் நடைபெறும் கணக்கெடுப்பில் அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவதை உறுதி செய்ய கூடுதல் மாநில திட்ட இயக்குநர் அறிவுரைகள் வழங்கியுள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கி பள்ளிக்கு வருகை புரிய செய்வது பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களிடம் பயிலும் அனைத்து குழந்தைகளின் ரேஷன் கார்டு எண்ணை பெற்று வைத்து இருத்தல் வேண்டும். ஆதார் அட்டை, பிறப்பு சான்று இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக்கூடாது. குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட்டு பின்பு ஆவணங்களை பெற பெற்றோருக்கு வழிகாட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை மறுக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

The post இம்மாத இறுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி: அனைத்து ஆசிரியர்களும் ஈடுபட உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: