திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி நியமனம்: செயலாளர் செங்குட்டுவன் அறிவிப்பு

சென்னை: திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவதாக திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணிச்செயலாளர் செங்குட்டுவன் அறிவித்துள்ளார். இது குறித்து செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரின் ஒப்புதலோடு திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அதன்படி, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு தலைவராக விஜயகுமார், துணை தலைவராக சரவணன், அமைப்பாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை அமைப்பாளர்களாக மில்லன், காளிதாசன், காண்டீபன், தங்கராஜ், விவேகானந்தன், ராம்பிராசத், லோகநாதன், அன்பரசு, ஜானகிராமன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை தென்மேற்கு மாவட்ட தலைவராக மூர்த்தி, துணை தலைவராக கண்ணன், அமைப்பாளராக சத்தியமூர்த்தி, துணை அமைப்பாளர்களாக பாஸ்கர், சசிகுமார், சரவணன், சேகர், சங்கர், பார்த்திபன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

சென்னை வடகிழக்கு மாவட்ட தலைவராக திருஞானம், துணை தலைவராக சங்கர், அமைப்பாளராக கர்ணன், மனோகரன், சிவக்குமார், கீதாராமன், ராஜசேகர ராவ் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். அதேபோல், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக சாமுவேல் தங்கம், துணை தலைவராக ரத்தினவேலு, அமைப்பாளராக தாம்பரம் நாராயணன், துணை அமைப்பாளர்களாக முத்துமணிகண்டன், முரளிதரன், தனசேகரன், கந்தன், செல்லப்பன், சிவராமன், தீனதயாளன், விமல், சுதாகர், தனபால் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அறிவித்துள்ளார்.

The post திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி நியமனம்: செயலாளர் செங்குட்டுவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: