திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கோயம்பேட்டில் குவிந்த பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருந்து சென்றனர்

அண்ணாநகர்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு, பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ கொண்ட பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு மேற்கொள்ளலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதையொட்டி, நேற்று கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 5,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து தட்டுப்பாடு வந்துவிட கூடாது என்பதற்காக, போக்குவரத்து கழகம் சென்னை புறநகர் பேருந்துகளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்க முடிவு செய்து இயக்கப்பட்டன. பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலை மோதியது. இதனால், 3 மணி நேரம் காத்திருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் பேருந்துகளில் சென்றனர். கோயம்பேட்டில் இருந்து செல்லும் பேருந்துக்களும், திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடுக்கு வரும் பேருந்துகளிலும் நெரிசலால் பயணிகள் அவதிப்பட்டனர்.

The post திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கோயம்பேட்டில் குவிந்த பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருந்து சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: