அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா: முழுவீச்சில் தயாராகும் தேர்

அழகர்கோவில்: அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு முழுவீச்சில் தேர் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்கள் காட்சியளித்து வருகிறார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கள்ளழகரின் தேரின் பாதுகாப்பு கூண்டுகள் அகற்றப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தேர் வரக்கூடிய நான்கு மாடவீதிகள், கோயில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சுத்தம் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம் மற்றும் கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா: முழுவீச்சில் தயாராகும் தேர் appeared first on Dinakaran.

Related Stories: