நீடிக்கும் வன்முறை சம்பவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்?: முதல்வர் பிரேன்சிங் தகவல்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் என் பிரேன் சிங் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.

இதுகுறித்து என் பிரேன் சிங் தன் ட்விட்டர் பதிவில், “மாநில நிலவரம் குறித்து உள்துறை அமமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பல்வேறு முக்கியமான விஷயங்களை விவாதித்தேன். மணிப்பூர் மாநில மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசு விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளன.

 

The post நீடிக்கும் வன்முறை சம்பவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்?: முதல்வர் பிரேன்சிங் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: