தேசிய தேர்வு முகமை குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்பு: நிபுணர் குழு முடிவு

புதுடெல்லி: நீட் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடு, யுஜிசி நெட் வினாத்தாள் டார்க்நெட்டில் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டது போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) மேம்படுத்த முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்தது. இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இது குறித்து குழுவின் தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்த விஷயத்தில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அவர்களின் கவலைகள், ஆலோசனைகளைப் பெறுவதே எங்களின் முதல் முன்னுரிமை. அவர்களிடமிருந்து நேரிலோ, ஆன்லைன் வாயிலாகவோ கருத்துக்களை பெறுவோம். இவற்றை அடுத்த 15 நாட்களில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்ததாக எதிர்காலத்திலும், பிழைகள் இல்லாத வலுவான அமைப்பை உருவாக்குவது குறித்து திட்டமிட உள்ளோம்’’ என்றார்.

The post தேசிய தேர்வு முகமை குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்பு: நிபுணர் குழு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: