தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை

 

கரூர், ஆக. 1: நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் குறிப்பிட்ட சில ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் தற்போதைய நிலையில் கரூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற பகுதிகளில் கிலோ ரூ. 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அத்தியாவசிய பொருளான தக்காளி விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி, குறைந்த விலைக்கு தக்காளி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை appeared first on Dinakaran.

Related Stories: