வடிகால்களை தூர்வார கரூர், செப். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் வடக்குத்தெரு, வெங்கடேஷ்வரா நகர் பகுதி, இலங்கை தமிழர் முகாம், சவுரிமுடித்தெரு, வஉசி வடக்குத்தெரு போன்ற பல்வேறு தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை வடிகால்கள் பெரும்பாலும் தரையோடு தரையாக தாழ்வாக உள்ளது. இதனால், கழிவு நீர் அனைத்தும் முறையாக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.
கழிவு நீர் தேக்கம் காரணமாக துர்நாற்றம், மற்ற கழிவுகள் குடியிருப்பு முன்பே தேங்கி நிற்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் இதனால் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும். இதே நேரத்தில், வடிகால்களை பார்வையிட்டு தூர்வார தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தாந்தோணிமலை பகுதிகளில் வடிகால்களை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.