மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

 

கரூர், செப். 6:தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கருர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், மாநில செயலாளர் ஜெயராஜ் முன்னிலையில், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராமநாதனை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் சந்தித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, மாவட்ட கல்வி அலுவலரிடம், மாவட்ட செயலாளர் அமுதன் கலந்து கொண்டு, கருர் மாவட்ட கிளையின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இந்த கோரிக்கைகள் குறித்து விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், வட்டாரத்தில் உள்ள தணிக்கை தொடர்பாக ஒய்வு ஆசிரியர்கள் பணப்பயன் பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், மாற்றுப் பணி வழங்கும் போது, அனைத்து வட்டாரங்களிலும் ஒரே நிலைப்பாட்டின் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பாதிககாத வகையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் தமிழரசி, வட்டார நிர்வாகிகள் ஜெரால்டு, ஜெயமணி, பத்மநாபன், அருள்குழந்தை, கரூர் நகரம் மார்ட்டின், தாந்தோணி வட்டார நிர்வாகிகள் பூபதி, அமலி, ஜான்சிராணி, கிருஷ்ணராயபுரம் நிர்வாகிகள் சரவணகுமார், வெங்கடேசன், கடவூர் நிர்வாகிகள் ஜான்சன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

 

The post மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: