முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகரூர், வெங்கமேடு ₹ 1.55 கோடியில்மீன் மார்க்கெட் கட்டும் பணி விரைவு படுத்தப்படுமா?

கரூர், செப். 12: கரூர் மாநகராட்சி வெங்கமேட்டில் ரூ.1.55 கோடியில் மீன் மார்க்கெட் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், வெங்கமேடு பகுதியில் சாலையோரங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இதனால், பொதுமக்களுக்கும் பொது சுகாதார பணிக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் இருந்து வந்தது. வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக வெங்கமேட்டில் சாலையின் இருவரும் செயல்பட்டு வந்த மீன் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு தனியாக ஒரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கியது. இதன்படி, முதற்கட்டமாக பழைய மீன் மார்க்கெட் கடையை அப்புறப்படுத்திவிட்டு 10,000 சதுர அடியில் 25 கடைகள் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகரூர், வெங்கமேடு ₹ 1.55 கோடியில்மீன் மார்க்கெட் கட்டும் பணி விரைவு படுத்தப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: