வேலாயுதம்பாளையம், செப்.13: கரூர் மத்திய, கிழக்கு, மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளில் வருகிற 15ம் தேதி திமுக பவளவிழாவை முன்னிட்டு இருவண்ண கொடி ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் மாவட்ட திமுக வழிகாட்டலின் அடிப்படையில் கரூர் மாநகர, மத்திய கிழக்கு திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டல தலைவரும், மாநகர பகுதி பொறுப்பாளருமான ராஜா தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக முப்பெரும் விழாவை பகுதி கழக மாநகராட்சிக்கு உட்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் கழகத்தினர் வீடுகளில் திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு மாநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் உள்ள திமுக கொடிக்கம்பங்களில் பெயிண்ட் அடித்து கட்சி கொடி ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
திமுக பவள விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பசுபதிபாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகுதி கழக பொறுப்பாளர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் லாரன்ஸ், நந்தினி வெங்கடேஷ், சுகாதார குழு தலைவர் பசுவை சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கரூர் மத்திய கிழக்கு மாநகர பகுதியில் முப்பெரும் விழா அன்று கழகத்தினர் வீடுகளில் திமுக கொடியேற்றுவோம்: நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.