காஞ்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பெண்களுக்கு அதிக நல திட்டங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஐயங்கார் குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமணன் அனைவரையும் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் பெண்ணுரிமையில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசுகையில், ‘பெண்களுக்கான அதிக நல திட்டங்களை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் ஆட்சியில் பெண்ணுரிமை மற்றும் சொத்துரிமை என வழங்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண் கல்வி மற்றும் சுகாதாரம் என பெண்கள் நலனில் தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு ஆளும் மாநிலங்களில் கல்வி உரிமை என்பதே கிடையாது. வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் டோல்கேட் கட்டணம், ஜிஎஸ்டி என அனைத்திலும் விலை உயர்வு அளித்து தற்போது தமிழகத்தை பார்த்து குறை சொல்கிறார்கள்’ என்றார்.

இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட குழு துணை தலைவர் நித்யா குமார், ஒன்றிய குழு தலைவர்கள் மலர்கொடி குமார், ஹேமலதா ஞானசேகர், ஒன்றிய குழு துணை தலைவர்கள் திவ்ய பிரியா இளமது, வசந்தி குமார், ஒன்றிய நிர்வாகிகள் கன்னியப்பன், தயாளன், வீரராகவன், முனியம்மாள் ராஜகோபால், கமலக்கண்ணன், பரசுராமன், தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசு, வில்லவன், அசோகன், ஐயங்கார் குளம் நிர்வாகிகள் தேவராசன், அன்பழகன், சந்திரசேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

The post காஞ்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பெண்களுக்கு அதிக நல திட்டங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: