அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு புயலை எதிர்கொள்ள தயார்: தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள புயலை எதிர்க்கொள்வதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தயார் நிலையில் இருப்பதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்தில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார் ஆகியோர் தயார் நிலையில் உள்ள வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து நிருபர்களிடம் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பேசியதாவது: தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் 364 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் 6473 அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு புயலை எதிர்கொள்ள தயார்: தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: