அதிமுக மாஜி அமைச்சர் திடீர் அட்மிட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், சளி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த சி.விஜயபாஸ்கருக்கு நேற்று உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. இதையடுத்து நேற்று மாலை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

The post அதிமுக மாஜி அமைச்சர் திடீர் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: