நிவர் புயல் எதிரொலியாக மழை, வெள்ள பாதிப்பு புகார்களுக்கு இலவச எண்கள் வெளியீடு கலெக்டர் தகவல்

வேலூர், நவ. 24: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமானத இன்று(24-11-2020) ‘நிவர்’ என்கிற அதிதீவிர புயலாக மாறி, 25ம் தேதி (நாளை) பிற்பகல் சென்னை அடுத்துள்ள மகாலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் சுமார் 125 கி.மீ அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு வீசிய வார்தா புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக சுமார் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 31 வீடுகள் பகுதியாகவும், 6 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. வார்தா புயலின் போது மனித மற்றும் கால்நடை உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 60.72 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதற்காக மொத்த நிவாரண தொகையாக ₹9.76 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, எதிர்வரும் 25ம் தேதி அன்று கரையை கடக்கும் உள்ள நிவர் புயலானது. 125 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘நிவர்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்டதில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மழை மற்றும் வெள்ள அவசர தேவைக்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1077’ மற்றும் ‘0416-2258016’ என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  மேலும், குடிசைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் குடும்பங்கள் அருகாமையில் உள்ள பகள்ளி கட்டிடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், முதலான அத்தியாவசிய பொருட்கள் விஏஓ மூலம் வழங்கப்படும்.

ஏரிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமானதாக உள்ளதால் சிறுவர்கள் நீச்சல் தெரியாதவர்கள் அங்கு குளிப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. தென்னை மரங்களை பாதுகாக்க ஒரு சில தென்னங்கீற்றுகள், இளநீர் குலைகளை வெட்டிவிடுதன் மூலம் அந்த மரங்கள் காற்றின் வேகத்திற்கு விழுந்துவிடாமல் தடுத்து காப்பாற்ற முடியும் என்பதை விவசாயிகள் அறிந்து கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>