குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க எம்பி உத்தரவு பொறியாளர், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை

வேலூர், நவ.22: வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி பொறியாளர், ஒப்பந்ததாரர்களுக்கு வேலூர் எம்பி கதிர்ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி வேலூர் நகரம், காட்பாடி, காந்தி நகர் உட்பட மாநகராட்சிக்கு உட்பட்ட பகதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சாலைகளின் அவலநிலையை கருத்தில் கொண்டும் அவற்றை உடனடியாக சீரமைக்கும் வகையிலும் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் நேற்று வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன், பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர்கள் உட்பட மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து ஒப்பந்ததார்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எம்பி கதிர்ஆனந்த், மாநகராட்சி பகுதியில் குறிப்பாக காட்பாடி மற்றும் காந்தி நகர் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகள், தெருக்கள் அனைத்தையும் டிசம்பர் 15ம் தேதிக்குள் சீரமைக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார். இதையடுத்து பொறியாளர் சீனிவாசனும், ஒப்பந்ததாரர்களும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் டிசம்பர் 15ம் தேதிக்குள் சீரமைத்து விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

Related Stories:

>