கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது பல லட்சத்துக்கு வர்த்தகம்

கே.வி.குப்பம், அக்.20: கே.வி.குப்பம் திங்கள் ஆட்டுச் சந்தை நேற்று களைகட்டியது. பல லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்தது. கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக சந்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக சந்தை மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் கடந்த மூன்று வாரங்களாக புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம் போல் திங்கள் ஆட்டு சந்தை தொடங்கியது. வழக்கத்தை விட நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு, பேரணாம்பட், ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர் ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது ஆடுகளை வியாபாரத்திற்காக கொண்டு வந்திருந்தனர். மேலும் எதிர்பார்த்ததை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: