நவராத்திரி விழா துவக்கம் கோயில், வீடுகளில் கொலு வழிபாடு

பொள்ளாச்சி, அக். 18: சரஸ்வதி பூஜையையொட்டி நவராத்திரி விழா நேற்று துவங்கியது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோயில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடக்கிறது. சரஸ்வதி பூஜை வரும் 25ம் தேதியும், விஜயதசமி விழா 26ம் தேதியன்றும்  கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முதல் நவராத்திரி விழா ஆரம்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகரில் கடைவீதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரியம்மன், சவுடேஸ்வரியம்மன், காமாட்சியம்மன், ஆனைமலை மாசாணியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் நவராத்திரி  சிறப்பு பூஜை நேற்று துவங்கப்பட்டது.

மேலும், பல கோயில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக சில கோயில்களில் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க கொலு வைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  இதனால், பலரும் தங்கள் வீடுகளிலே கொலு வைத்து நவராத்திரி விழாவை துவக்கினர்.  பல்வேறு தெய்வங்களின் உருவ கொலுவும், பாரம்பரிய கலை நிகழ்வு மற்றும் பொழுதுபோக்குசம்பந்தமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான கொலு பொம்மைகளுக்கும் தினமும் பல்வேறு வகையான பூஜைகளை நடத்தி 25ம் தேதி வரை வழிபட உள்ளனர்.

Related Stories: