திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை

கோவை, அக். 1:  இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஒற்றை கலாசாரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்திய பண்பாட்டின் தோற்றம், பரிமாணம் குறித்து இவர்கள் அமைத்த குழு என்பது தெளிவாகிறது. உடனடியாக இந்த குழுவை கலைக்க வேண்டும். இதை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இல்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்து திராவிட பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வெண்மணி, மலரவன், சாஜித், கோவை ரவிக்குமார், நேருதாஸ், ரகுப், இளவேனில் உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: