சென்னிமலையில் த.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.1: சென்னிமலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற கழகத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மயில்துரையன் வரவேற்றார். குடும்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், காலாடி, பண்ணாடி, வாத்தியான், சடையன் என ஏழு உட்பிரிவுகளையும் தேவேந்திர குல வேளாளர் எனக்கருதி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இக்கோரிக்கை தொடர்பாக பலமுறை அரசிடம் முறையிட்டும், தாமதம் ஏற்படுவதாக கூறி, கருப்பு சட்டையுடன் முழக்கமிட்டனர். பவானி ஒன்றிய செயலாளர் சோமு, கொடுமுடி ஒன்றிய செயலாளர் சக்திவேல், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, பொறுப்பாளர் முத்துசாமி, சென்னிமலை ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார், இளைஞரணி செயலாளர் குமரேஷ், மாநகர செயலாளர் குணா, மகளிரணி செயலாளர்கள் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: