ஈரோடு மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்

ஈரோடு, ஏப்.23: ஈரோடு மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் 2023-2024 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை கடந்த மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பின் காரணமாக மாநகராட்சி சார்பில் வரி கட்டணத்தை செலுத்த பொதுமக்களை கட்டாயப்படுத்தவில்லை. இருப்பினும், பொதுமக்கள் தாமாக முன் வந்து தங்களது வரிகளை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவின் காரணமாக தற்போது மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூல் அலுவலர்கள் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு வரி வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வீடுகளுக்கு செல்லும் அலுவலர்கள், வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, பாக்கி வரிகளை நிலுவையின்றி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர். வரி தொகை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்றம் மூலம் ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தும் வருகின்றனர்.

The post ஈரோடு மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: