மைலம்பாடியில் ரூ.81 லட்சத்துக்கு எள் விற்பனை

 

ஈரோடு, ஏப். 29: மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 81 லட்சத்துக்கு எள் விற்பனையானது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 727 மூட்டைகள் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில், கருப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 131.29க்கும், அதிகபட்சமாக ரூ. ரூ. 148.19க்கும், சராசரி விலையாக ரூ. 139.79க்கும் விற்பனையானது.

இதேபோல, சிவப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 134.69க்கும், அதிகபட்சமாக ரூ. 149.69க்கும், சராசரி விலையாக ரூ. 141.39க்கும் விற்பனையானது. வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 132.99க்கும், அதிகபட்சமாக ரூ. 147.59க்கும், சராசரி விலையாக ரூ. 139.99க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் 57 ஆயிரத்து 588 கிலோ எடையிலான எள் ரூ. 81 லட்சத்து 29 ஆயிரத்து 559க்கு விற்பனையானதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post மைலம்பாடியில் ரூ.81 லட்சத்துக்கு எள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: