பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கோபி, ஏப்.28: கோடை வெய்யிலில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் கோபி பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் 110 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. இதனால் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்காக இலவச நீர்மோர் பந்தல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோபி நகர திமுக சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோபி நகர திமுக செயலாளர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பயணிகளுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழ துண்டுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில திமுக நெசவாளர் அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், மாநில திமுக விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன்,ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், நகர இளைஞரணி அமைப்பாளரும், திட்ட குழு உறுப்பினருமான விஜய் கருப்புசாமி, தலைமை கழக பேச்சாளர் குமணன்,நகர பொறுப்பாளர்கள் சவுகத் அலி, அய்யாசாமி, ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: