வேலூர் மாவட்டத்தில் 27 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்தது

வேலூர், செப்.29: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து வேலூர் மாவட்டத்தில் 27 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொது செயலளார் துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, வேளாண் சட்டத்தை எதிர்த்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, காங்கிரஸ் மாநகர மாவட்ட செயலாளர் டீக்காராமன், மதிமுக மாநகர மாவட்ட ெசயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் மாவட்ட செயலாளர் தயாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சிம்புதேவன், விசிக மாநில அமைப்பு செயலாளர் நீலசந்திரகுமார், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் ஷான்பாஷா முன்னாள் எம்எல்ஏக்கள் விஜய், ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மண்டல குழுத்தலைவர் சுனில்குமார், முன்னாள் கவுன்சிலர் அன்பு, மதிமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உட்பட கலந்துகொண்னடர்.

காட்பாடி காந்திநகரில், பகுதி செயலாளர் பரமசிவம் தலைமையிலும், சேவூரில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும், ஊசூரில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமையிலும், விருபாட்சிபுரத்தில் பகுதி செயலாளர் தங்கதுரை, தொரப்பாடியில் பகுதி செயலாளர் ஜயப்பன் தலைமையிலும், அணைக்கட்டில் ஒன்றிய செயலாளர் பாபு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் மாவட்டம் முழுவதும் 27 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

>