வைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை

கோவை, மார்ச்.20:  கோவை மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டில் உள்ள பன்னீர்செல்வம் பூ மார்க்கெட், வாழைக்காய் மண்டி ஆகியவற்றில் இரவு நேரத்தில் மாஸ் கிளினீங் செய்திட தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவதிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 24வது வார்டிற்கு உட்பட்ட பன்னீர் செல்வம் மார்க்கெட்டில் தினமும் நூற்றுக்கணக்கான டன் பூக்கள் வியாபாரம் ஆகிகின்றன. அதன் கழிவுகள் மார்க்கெட் உள்ள தெரு முழுவதும் நிரம்பி வழிகின்றன. இது தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. எனவே மார்க்கெட் முழுவதும் இரவு நேரத்தில் மாநகராட்சி சார்பாக மாஸ் கிளினீங் செய்ய வேண்டும். அதே போல் தடாகம் சாலையில் உள்ள வாழைக்காய் மண்டியிலும் மாஸ் கிளினீங் செய்ய் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: