தமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்

சத்தியமங்கலம், மார்ச் 20: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தமிழக அரசு பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டதால் சத்தியமங்கலம் பஸ் நிலையம் வெறிச்சோடியது.  கொரோனா அச்சுறுத்தலால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கர்நாடக பயணிகள் மாநில எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனர். வெளிமாநில பயணிகளால்  கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தமிழகம் கர்நாடகா இடையே இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் ரேக்கில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஓரிரு தனியார் பஸ்கள் மற்றும் கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  நகராட்சி பணியாளர்கள் பஸ் நிலையத்தில் உள்ள பஸ்களில் கைப்பிடி மற்றும் இருக்கைகளில் கிருமி நாசினி தெளித்து நோய்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் கை கழுவதற்கு தற்காலிக பைப் பொருத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>