சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய

வேலூர், மார்ச் 20: வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் வேலப்பாடியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக மருத்துவக்குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கக்கூடாது எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகாயம் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் கொரோனா வதந்தியை சிலர் பரப்பியதாகவும் தெரிகிறது. இதையடுத்து சட்டத்திற்கு விரோதமாக ஒன்று கூடுதல், அரசு ஊழியர் பணி செய்ய விடாமல் தடுத்தல், வதந்தி பரப்பி அச்சத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் அதே பகுதியை சேர்ந்த 10 பேர் மீது பாகாயம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>