சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம்

சென்னிமலை, மார்ச் 19:  சென்னிமலை முருகன் கோயிலில் சிறிய, பெரிய உண்டியல் என சுமார் 8 நிரந்தர உண்டியல்கள் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை செலுத்தி வருகின்றனர். உண்டியல் என்னும் பணி குறிப்பிட்ட ஒரு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில்  கடந்த 145 நாட்களுக்கு பின்பு நேற்று 8 உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. இப்பணியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் சென்னிமலை கைத்தறி  கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் பங்கேற்றனர். இதில் ரொக்கம் ரூ. 50 லட்சத்து, 94 ஆயிரத்து 726 மற்றும் தங்கம் 166 கிராம், வெள்ளி இரண்டு கிலோ 735 கிராம், இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரொக்க பணத்தோடு சுமார் 60 லட்சம் காணிக்கையாக இருந்தது தெரியவந்தது. உண்டியல் திறப்பில் கோவை ஈச்சனாரி கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், தக்கார் நித்யா, ஆய்வாளர் ஆதிரை, கோயில் செயல் அலுவலர் அருள்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>