என்பிஆர்.க்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச். 19: என்பிஆர் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஈரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப்படுவார்கள். சிஏஏ, என்ஆர்சி.க்கு ஆதரவாக வாக்களித்து இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. இருந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், என்பிஆர் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும்  தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சாகுல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் காஞ்சி இப்ராகிம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். என்ஆர்பி.க்கு ஆதரவாக தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்த கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

Related Stories: