காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 18: காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணார்வு குறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்திரன், கலெக்டர்  பொன்னையா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் கலெக்டர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களுக்கு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் கைகழுவும் திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள களப்பணியாளர்களை கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். இளநீர், ஓஆர்எஸ், கஞ்சி போன்ற நீர் சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை நீதிமன்ற வளாகத்தில் வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்க ஆலோசிக்கப்பட்டது என மாவட்ட பொன்னையா, தெரிவித்தார். எஸ்பி சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: