வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள் பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு வித்யாசாகர் கல்விக் குழுமம் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ் குமார் கன்காரியா, பள்ளி முதல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக அகில உலக பதிவு பெற்ற அக்வாட்டிங் தெரபிஸ்ட் டாக்டர் மதன் பங்கேற்று நீச்சல் போட்டியை‌ தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளி மாணவன் கிஷோர் அனைவரையும் வரவேற்றார்.

போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 11 முதல் 17 வரை உள்ள வயதினருக்கு தனி மற்றும் குழு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவர்கள் நீச்சல் குளத்தில் தங்களின் தனி திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். அதனைத்தொடர்ந்து, அக்வாட்டிங் தெரபிஸ்ட் டாக்டர் மதன் பல்வேறு நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மாணவி சுவேதா ஸ்ரீ நன்றி கூறினார்.

The post வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: