மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 9 பசு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உடபட்ட தென்னேரி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இவை மட்டுமின்றி ஊராட்சியை சுற்றியுள்ள 600 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டு அதனை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக ஆங்காங்கே குவியல் குவியல்களாக வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் ஒன்றன் பின் ஒன்றாக வீட்டிற்கு திரும்பும் போது ஆங்காங்கே திடீரென மயங்கி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், மயங்கி விழுந்த கால்நடைகளுக்கு முதலுதவி செய்வதற்குள் சுமார் ஒன்பது கால்நடைகள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தென்னேரியில் கால்நடைகள் வளர்ப்போர் அதிகம். நேற்று மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெல் குவியல்கள் இருப்பதாகவும், அதை இப்பகுதியில் உள்ள கால்நடைகள் சேதம் செய்வதாக மர்ம நபர் மாடுகளுக்கு ஏதேனும் ரசாயனம் கலந்த உணவை நெல் குவியலுக்கு அருகாமையில் வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என குற்றம் சாட்டினர்.இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி, வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகர், வட்டாட்சியர் சதீஷ், மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர்.

The post மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 9 பசு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: