முதியவரிடம் நகை அபேஸ்

சென்னை: மந்தைவெளி தேவநாதன் சாலையை சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தி.நகரில் இருந்து மாநகர பஸ்சில், மந்தைவெளிக்கு சென்று கொண்டிருந்தார். அண்ணாசாலை வழியாக பஸ் சென்றபோது, இவரது கையில் வைத்திருந்த பையை பிளேடால் கிழித்து, அதில் வைத்திருந்த 11 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து பார்த்தசாரதி ஆயிரம் விளக்கு  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: