வைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

திருவையாறு, மார்ச் 1: திருவையாறு அருகே வைக்கோல் கட்டு கட்டும் இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரவி மகன் அப்பு (25). இவர் வைக்கோல் கட்டும் மிஷன் வைத்துள்ளார். கீழத்திருப்பூந்துருத்தி ஐயனார் கோவில் அருகே கோரை வாய்க்கால் பக்கத்தில் உள்ள ஜான் என்பவர் வயலில் இயந்திரம் மூலம் அறுவடை செய்த வைக்கோலை கட்டு கட்டி கொண்டிருந்தனர். அப்போது கட்டு கட்டும் மிஷினில் இருந்த சனலை அப்பு எடுத்து விடும்போது இயந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.இதையடுத்து அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ரவி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிந்து அப்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: