தஞ்சாவூர், மார்ச் 16: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சகி-ஒருங்கிணைந்த சேவை மைய பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்\” என்னும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்த ஒரு நாள் பயிலரங்கினை நேற்று துவக்கி வைத்தார்.
பெண்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த மற்றும் சேவை மையம் மூலமாக நடத்தப்பட்ட பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்த ஒரு நாள் பயிலரங்கத்திற்கு மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு குழந்தை திருமணம் மற்றும் சிறுவயதில் கர்ப்பம் அடைதல் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும். எப்படி தீர்வு காண வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லதா, காவல் ஆய்வாளர் சந்திரா, வழக்கறிஞர்கள் கவிதா , பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
