திருக்காட்டுபள்ளியில் கோடை காலம் தொடங்கியும் தொடரும் பனிப்பொழிவு

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 9: பூதலூர் சாலையில் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கினை எரியவிட்டபடி சென்றனர். திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சாலை விண்ணமங்கலம் பகுதியில் காலை ஏழு மணி வரை மூடுபனி சாலையில் மூடியிருந்தது.

அப்போது அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் வண்டிகளின் முகப்பு விளக்கினை எரியவிட்டப்படி சென்றன. ஆனால் பகல் வேளையில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதிகாலையில் வயல்வெளிகளிலும், சாலைகளிலும் மூடுபனி நிலவியதால் விளையாமல் இருக்கும் வயல்களில் உள்ள நெல்மணிகள் சீக்கிரம் விளையும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். பூதலூர் தாலுகா பகுதியில் அறுவடை நடைபெற்று வருகின்றது.

 

Related Stories: