தஞ்சாவூர், மார்ச்.4: ஈரான் மீதான தாக்குதலை கைவிடக்கோரி தஞ்சையில் சிஐடியூ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க அதிபர் உருவப்படத்தை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு நிலவியது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அமெரிக்க அதிபர், இஸ்ரேல் பிரதமர் ஆகியோரின் உருவப்படங்களை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
