பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு

 

தஞ்சாவூர், மார்ச்14: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு திட்ட உணவின் தர ஆய்வு மற்றும் இருப்பில் உள்ள எரி
வாயு உருளைகள், தேவைப்படும் அளவு ஆகியவை குறித்து தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாபநாசத்தில் பட்டா மேல் முறையீடு பணிகள் குறித்த இடம், அரையபுறம் கிராமத்தில் நில புனரமைப்பு தடையின்மை சான்று, கணபதி அக்ரஹாரம், வேளாண் விரிவாக்க மையத்திற்கு நீர் நிலம் மாற்றம் செய்வதற்கான புல தணிக்கை, இ-சேவை மையம், திருமண்டங்குடி கிராமத்தில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை குத்தகை மறு நிர்ணயம் இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: