ஒரத்தநாட்டில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படையினர் கொடி அணி வகுப்பு

ஒரத்தநாடு, மார்ச் 16: ஒரத்தநாட்டில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கொடி அணி வகுப்பு பேரணி நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பெரியார் சிலையில் இருந்து பேருந்து நிலையம், அண்ணா சிலை, கடைத்தெரு வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஒரத்தநாடு டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சிவகுமார், பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, திருவோணம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் 65 துணை ராணுவ வீரர்கள் மற்றும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம், வாட்டாதி கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

 

Related Stories: