கோவில்பட்டியில் நர்ஸ் மாயம்

கோவில்பட்டி, பிப்.28: கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற நர்ஸ் மாயமானார்.கோவில்பட்டி வஉசி நகரைச் சேர்ந்த பரமசிவம் மகள் ரேவதி(19). நர்சிங் படித்துள்ள இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி இரவு பணிக்கு சென்ற ரேவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ரேவதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: