கயத்தாறில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

கயத்தாறு, பிப்.28: கயத்தாறில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கயத்தாறு சீரணி கலையரங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கயத்தாறு முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி மாரியப்பன், கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்துபாண்டியன், தலைமை பேச்சாளர் அல்லிக்கண்ணன், கடம்பூர் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார். விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் பேசினர்.

Advertising
Advertising

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது, கயத்தாறு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கயத்தாறு தனிதாலுகா திட்டம் செயல்படுத்தப்பட்டு தனி அலுவலக கட்டிடம் ரூ.2.77 கோடியில் கட்டப்பட்டு கடந்த 22ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கயத்தாறு பகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார். ஒன்றிய இளைஞர் பாசறை இணைச்செயலாளர் செந்தில்செல்வன், ஒன்றிய மாணவரணி உத்தண்டராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு முருகன் ஆகியோர் நன்றி கூறினர். ஏற்பாடுகளை கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி செய்திருந்தார்.

Related Stories: